செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா!…

ஐ.பி.எல்: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா!…

ஐ.பி.எல்: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா!… post thumbnail image
சார்ஜா:-பெங்களூர்,கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான 11-வது ஐ.பி.எல். லீக்போட்டி சார்ஜாவில் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.அதன்படி காலிஸ்,காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். காம்பீர் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மணீஷ் பாண்டே 5 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

3-வது விக்கெட்டுக்கு காலிஸுடன் கிறிஸ் லைன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பெங்களூர் அணியின் பந்து வீச்சை நாலாபுறம் பறக்க விட்டனர். இதனால் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உளர்ந்தது.45 ரன் எடுத்திருந்த லைன் வருண் ஆரோன் பந்தில் அவுட் ஆனார். அவர் 31 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது கொல்கத்தா அணி 11.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்திருந்தது. லைனைத் தொடர்ந்து காலிஸும் 43 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்கள் சரியாக ஆடாததால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்துள்ளது.
பெங்களூர் அணி சார்பில் வருண் ஆரொன் 4 ஓவர் வீசி 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரரராக களம் இறங்கிய யோகேஸ் தகவாலே 28 பந்தில் 40 ரன் எடுத்தார். அதன்பின் வந்த வீராட் கோலி, யுவராஜ் சிங் தலா 31 ரன்னில் வெளியேறினர்.அதன்பின் பெங்களூர் அணி வெற்றிக்கு 8 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது. ஆனால் பெங்களூர் அணியால் 7 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

KOL – Inning

Batsman R B M 4s 6s S/R
Kallis J. c Takawale Y. b Chahal Y. 43 42 72 2 1 102.38
Gambhir G. lbw Starc M. 0 1 2 0 0 0
Pandey M. c Kohli V. b Morkel A. 5 3 5 1 0 166.67
Lynn C. c de Villiers A. b Aaron V. 45 31 47 3 3 145.16
Pathan Y. c Kohli V. b Aaron V. 0 2 3 0 0 0
Uthappa R. c Starc M. b Aaron V. 22 18 27 0 1 122.22
Yadav S. not out 24 18 27 1 1 133.33
Kumar V. c Morkel A. b Starc M. 4 5 15 0 0 80.00
Extras: (w 4, b 1, lb 2) 7
Total: (20 overs) 150 (7.5 runs per over)
Bowler O M R W E/R
Starc M. 3.6 0 33 2 9.17
Morkel A. 1.6 0 21 1 13.13
Aaron V. 3.6 0 16 3 4.44
Muralitharan M. 1.6 0 25 0 15.63
Chahal Y. 3.6 0 26 1 7.22
Dinda A. 3.6 0 26 0 7.22

BAN – Inning

Batsman R B M 4s 6s S/R
Starc M. not out 0 0 6 0 0 0
Morkel A. not out 6 5 13 0 0 120.00
Patel P. c Lynn C. b Kumar V. 21 19 35 3 0 110.53
Takawale Y. lbw Kallis J. 40 28 32 9 0 142.86
Kohli V. b Narine S. 31 23 38 4 0 134.78
Singh Y. c Pathan Y. b Yadav U. 31 34 53 2 1 91.18
de Villiers A. c Lynn C. b Kumar V. 11 12 25 1 0 91.67
Extras: (w 2, nb 3, lb 5) 10
Total: (20 overs) 148 (7.4 runs per over)
Bowler O M R W E/R
Kallis J. 3.6 0 26 1 7.22
Yadav S. 0 0 0 0 11.25
Kumar V. 3.6 0 26 2 7.22
Morkel M. 3.6 0 34 0 9.44
Narine S. 3.6 0 17 1 4.72
Yadav U. 3.6 0 40 1 11.11

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி