செய்திகள் ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தல்!…

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தல்!…

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் நடுவானில் கடத்தல்!… post thumbnail image
பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவிலிருந்து வெர்ஜின் புளு என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 737-800 ரக விமானம் ஒன்று பிரிஸ்பேனுக்கு புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடத்தப்பட்ட அந்த விமானம் இந்தோனேசியாவில் பாலி தீவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.கடத்தப்பட்டுள்ள அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. மேலும், இந்த கடத்தலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி