செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் கமலின் ‘உத்தம வில்லன்’!…

விளம்பரங்கள்

சென்னை:-‘விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் கமலுக்கு பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்ததாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

இதையடுத்து ‘உத்தம வில்லன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் உத்தம வில்லன் செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: