செய்திகள்,திரையுலகம் ஜூன் 7ம் தேதி விஜய், அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம்!…

ஜூன் 7ம் தேதி விஜய், அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம்!…

ஜூன் 7ம் தேதி விஜய், அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம்!… post thumbnail image
சென்னை:-அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர்,‘கிரீடம்’ படத்தை தொடர்ந்து, ‘பொய் சொல்லப்போறோம்,’ ‘மதராச பட்டினம்,’ ‘தெய்வத்திருமகள்,’ ‘தாண்டவம்,’ ‘தலைவா’ ஆகிய படங்களை விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இவர் டைரக்டு செய்த ‘சைவம்’ என்ற புதிய படம், மே 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அமலாபால், ‘விகடகவி,’ ‘சிந்து சமவெளி,’ ‘மைனா,’ ‘வேட்டை,’ ‘காதலில் சொதப்புவது எப்படி,’ ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்,’ ‘நிமிர்ந்து நில்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் டைரக்ஷனில், ‘தெய்வ திருமகள்,’ ‘தலைவா’ ஆகிய 2 படங்களிலும் அவர் நடித்தார்.அப்போது, டைரக்டர் விஜய்,அமலாபால் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலை இருவருமே முதலில் மறுத்து வந்தார்கள். விஜய் டைரக்டு செய்த ‘சைவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அமலாபால் வந்திருந்தார். விழாவில் அவர் பேசும்போது, ‘‘இது, என் குடும்ப விழா’’ என்று குறிப்பிட்டார்.டைரக்டர் விஜய்,அமலாபால் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முன்வந்தார்கள்.

அதைத் விஜய்,அமலாபால் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, ஜூன் 7ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் நடக்கிறது.நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், இரண்டு பேரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி