மே 6ம் தேதி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்தர் திருமணம்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம்பெறும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலின் மூலம் அறிமுகமான பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு, இந்தி தொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

சின்மயிக்கும் நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் காதல் மலர்ந்தது. ராகுல் ரவீந்தர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து இவர்களது திருமணம் மே மாதம் 6ம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் மிக எளிமையாக நடைபெறும் என்றும், திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: