செய்திகள்,திரையுலகம் ‘மான் கராத்தே’ படத்தை தடை செய்ய கமிஷனர் அலுவலகத்தில் புகார்!…

‘மான் கராத்தே’ படத்தை தடை செய்ய கமிஷனர் அலுவலகத்தில் புகார்!…

‘மான் கராத்தே’ படத்தை தடை செய்ய கமிஷனர் அலுவலகத்தில் புகார்!… post thumbnail image
சென்னை:-திருவொற்றியூர் சாத்துமாநகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (38). ஜே.கே.எம் குத்துச் சண்டை பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவர் மற்றும் தமிழ்நாடு குத்துச் சண்டை கழக பொதுச் செயலாளர் ராஜராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘மான் கராத்தே’ படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வீர விளையாட்டு.இதை தரக்குறைவாகவும், கேவலமாகவும் சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. குத்துச்சண்டை பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். எந்த விதமான அனுமதியும் பெறாமல் குத்துச்சண்டை பற்றிய காட்சிகள் மான்கராத்தே படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு தமிழ்நாடு திரைப்பட தணிக்கை துறை அனுமதி அளித்தது தவறான செயலாகும். நகைக்சுவைக்காக தரக்குறைவாக சித்தரித்திருப்பது குத்துச் சண்டை பற்றிய நன்மதிப்பை இளைஞர்களிடம் கெடுத்து விடும். எனவே, மான் கராத்தே படத்துக்கு தடை விதித்து, தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி