செய்திகள்,திரையுலகம் ஆதித்யா சோப்ரா,நடிகை ராணி முகர்ஜி ரகசிய திருமணம்!…

ஆதித்யா சோப்ரா,நடிகை ராணி முகர்ஜி ரகசிய திருமணம்!…

ஆதித்யா சோப்ரா,நடிகை ராணி முகர்ஜி ரகசிய திருமணம்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராணி முகர்ஜி. ஷாரூக்கான், அமீர்கான் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.தமிழில் கமலுடன் ஹேராம் படத்திலும் நடித்தார்.

தற்போது 36 வயதாகும் ராணி முகர்ஜிக்கும், பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதித்யா சோப்ராவுக்கும் நீண்டகாலமாகவே காதல் இருந்து வருகிறது. ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் இத்தாலியில், மிகவும் எளிமையாகவும், ரகசியமாகவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இத்தகவலை பிரபல சினிமா வர்த்தக வல்லுநர் தரண் ஆதார்ஷ் தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.ஆதித்யா சோப்ரா பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான யாஷ் சோப்ராவின் மகன் ஆவர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி