ஆஸ்திரேலியா செல்லும் ‘உத்தம வில்லன்’ படக்குழு!…

விளம்பரங்கள்

சென்னை:-‘விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பூஜாகுமார், ஆண்ட்ரியா மற்றும் பார்வதி மேனன் நடிக்கின்றனர். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். உத்தமன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் இயக்குநர் கே.பாலசந்தர், ஜெயராம், ஊர்வசி, நாசர், கே.விஸ்வநாத் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்துகின்றனர். இதற்காக கமல் உள்ளிட்ட படக்குழுவினர் தேர்தல் முடிந்ததும் அந்நாட்டுக்கு பயணமாக தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே ‘உத்தம வில்லன்’ படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: