செய்திகள்,தொழில்நுட்பம் மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி விரைவில் முடிவு!…

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி விரைவில் முடிவு!…

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி விரைவில் முடிவு!… post thumbnail image
பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகின்றன.

இதைப்போல மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி மீட்கும் பணியிலும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து ‘பிங்’ எனப்படும் சமிக்ஞைகள் கடந்த 8-ந்தேதி கிடைத்ததால், கறுப்பு பெட்டியை விரைவாக மீட்கும் நோக்கில் அமெரிக்காவின் ‘புளூபின்-21’ என்ற நீர்மூழ்கி ரோபோ ஈடுபடுத்தப்பட்டது.

இந்த ரோபோ 7 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீட்புக்குழுவினர் விரக்தியடைந்துள்ளனர்.எனவே கறுப்பு பெட்டியை தேடும் பணியை 5 அல்லது 6 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி