செய்திகள்,திரையுலகம் பார்த்திபன் படத்தில் பின்னணி பாடும் சிம்ரன்!…

பார்த்திபன் படத்தில் பின்னணி பாடும் சிம்ரன்!…

பார்த்திபன் படத்தில் பின்னணி பாடும் சிம்ரன்!… post thumbnail image
சென்னை:-தமிழில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பஞ்ச தந்திரம், உள்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். இவர் 2003ம் வருடம் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

தற்போது சினிமாவில் பின்னணி பாடகியாக மாறி இருக்கிறார். பார்த்திபன் இயக்கும் ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்’ என்ற படத்தில் சிம்ரன் ஒரு பாடலை பாடுகிறார்.இதுகுறித்து பார்த்திபன் கூறும் போது, சிம்ரன் நடிக்க வந்த போது பாடுவதில் தான் எனக்கு விருப்பம் உள்ளது என்று கூறினார்.

எனவே தான் அவரை இந்த படத்தில் பாட வைத்துள்னேன் என்றார்.
இந்த படத்தில் ஆர்யா, அமலாபால் ஆகியோர் கவரவ தோற்றத்தில் தோன்றுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி