அரசியல்,செய்திகள் கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்!…

கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்!…

கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்!… post thumbnail image
அமேதி:-உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார்.அமேதியில் குமாருக்கு ஆதரவு திரட்ட நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமேதி தொகுதிக்கு சென்றார். அங்கு அயோத்தி நகர் பகுதிக்கு சென்று ஒரு இடத்தில் வேனில் நின்றபடி பேசினார்.

அப்போது,சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் திடீரென கெஜ்ரிவாலை எதிர்த்து கோஷமிட்டனர். ராஜீவ் காந்தி வாழ்க, ஆட்சி செய்த முடியாத நீ டெல்லிக்கே ஓடு என்று கூச்சலிட்டனர். இதை கண்டு கெஜ்ரிவால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த பெண்களை கெஜ்ரிவால் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அந்த பெண்கள் அமைதி அடைய வில்லை.அதற்கு மாறாக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் வேறு வழியின்றி கெஜ்ரிவாலும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி