செய்திகள்,திரையுலகம் நடிகர் ராஜாவுக்கு ஏப்ரல் 25ம் தேதி திருமணம்!…

நடிகர் ராஜாவுக்கு ஏப்ரல் 25ம் தேதி திருமணம்!…

நடிகர் ராஜாவுக்கு ஏப்ரல் 25ம் தேதி திருமணம்!… post thumbnail image
சென்னை:-தமிழில் ஜெகன்மோகினி படத்தில் நமீதா ஜோடியாக நடித்தவர் ராஜா. கண்ணா படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார். ராஜாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகள் பெயர் அம்ரிதா.

இவர் கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள். ராஜா, அம்ரிதா திருமணம் வருகிற 25ம் தேதி சென்னையில் நடக்கிறது. ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். திருமணத்துக்கு பிறகு தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க போவதாக ராஜா அறிவித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி