அமிதாப் பச்சனுடன் இனைந்து ‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ பார்த்த பிரணாப் முகர்ஜி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அமிதாப் பச்சனின் நடிப்பில் ‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.ஆவி ரூபமாக மாறிய ஒரு அரசியல்வாதி, இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டு வென்று அரசியல் அமைப்பை சுத்தப்படுத்த முயற்சிக்கும் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு திரையிட்டுக் காட்ட ஆசைப்பட்ட தயாரிப்பு குழுவினர், இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் தெரிவித்து, ஜனாதிபதியின் அனுமதிக்காக காத்திருந்தனர்.

அவரும் இதற்கு ஒப்புதல் அளித்து, அமிதாப் பச்சனுடன் சேர்ந்து ஜனாதிபதி மாளிகையில் உள்ள விசேஷ திரையரங்கில் ‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ படத்தை பார்த்து ரசித்தார். படம் முடிந்த பின்னர் இதில் சிறப்பாக நடித்த அமிதாப் பச்சன் மற்றும் படக்குழுவினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்த அரிய நிகழ்வு தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், ‘இந்த நாட்டின் தலைவர் இந்த படத்தை பார்த்து, அவரது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஜனாதிபதியின் அனுமதியை கோரினோம். தனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கிடையில் ஜனாதிபதி மாளிகையிலேயே படத்தை திரையிட்டு பார்க்க அவர் ஒப்புதல் அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: