செய்திகள்,திரையுலகம் ‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!…

‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!…

‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!… post thumbnail image
அபுதாபி:-மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மலையாள படம் டைட்டானிக் சாதனையை முறியடித்துள்ளது.ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம் தான் இதுவரை பெற்றிருந்தது.

ஆனால் அந்த படத்தின் சாதனையை ‘த்ரிஷ்யம்’ முறியடித்து உள்ளது.திரிஷ்யம் கடந்த ஜனவரி மாதம் 2 ந்தேதி எல்டோரடோவில் வெளியானது.100வது நாளை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

மோகன்லாலின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத மாபெரும் வெற்றியை கொடுத்த இந்த படம் கேரளாவில் அனைத்து சாதனைகளையும் உடைத்து மிகப்பெரிய வசூலை கொடுத்தது. ரூ.4.6 கோடியில் மட்டும் தயாரான இந்த படம் இதுவரை 51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி