அரசியல்,செய்திகள்,திரையுலகம் ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை!…

ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை!…

ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை!… post thumbnail image
லக்னோ:-மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் ஹேமமாலினி, ஸ்மிருதி ரானி, காங்கிரஸ் சார்பில் ராஜ்பாபர், நக்மா, ராஷ்ட்ரிய லோக்தளம் சார்பில் ஜெயப்பிரதா, ஆம் ஆத்மி சார்பில் ஜவேத் ஜாப்ரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் நடித்த திரைப்படங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு நிறைய புகார்கள் வந்தன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் இவர்களது திரைப்படம் அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகள் நடித்த திரைப்படங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி