செய்திகள்,திரையுலகம் நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதி!…

நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதி!…

நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதி!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை அக்ஷராவின் அக்காவும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இப்பாடலை பாடிக் கொடுக்கும்படி ஸ்ருதிஹாசனிடம் தனுஷ் தான் கேட்டுக்கொண்டாராம். அதனால் தனுஷுக்காகவும், தனது தங்கை அக்ஷராவுக்காகவும் பிசியான நேரத்திலும் சென்னைக்கு வந்து இந்த பாடலை பாடிக்கொடுத்துள்ளார் ஸ்ருதி.

ஏற்கெனவே இளையராஜா இசையில் ஸ்ருதி, ‘தேவர்மகன்’, ‘ஹேராம்’, ‘என் மன வானில்’ ஆகிய படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையில் தற்போது இந்த பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி