செய்திகள்,திரையுலகம் நாய்குட்டிக்கு நடிகை த்ரிஷாவின் பெயரை வைத்த தோழிகள்!…

நாய்குட்டிக்கு நடிகை த்ரிஷாவின் பெயரை வைத்த தோழிகள்!…

நாய்குட்டிக்கு நடிகை த்ரிஷாவின் பெயரை வைத்த தோழிகள்!… post thumbnail image
சென்னை:-நாய்கள் மீது அன்பு கொண்டவர் நடிகை திரிஷா.அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

சமீபத்தில் இவரிடமிருந்து 2 நாய்குட்டிகளை அவரது தோழிகள் தங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக எடுத்துச் சென்றனர். திரிஷாவிடம் இருந்து அந்த நாய் குட்டிகளை வாங்கியதால் அவைகளுக்கு திரிஷ் என்று செல்லப்பெயர் வைத்தனர். இதையறிந்த திரிஷா, தோழிகளுக்கு நன்றி கூறினார்.

இதுபற்றி தனது இணைய தள பக்கத்தில் அவர்,எனது 2 தோழிகள் தாங்கள் தத்தெடுத்த 2 நாய்குட்டிகளுக்கு திரிஷ் என பெயர் சூட்டி உள்ளனர். விரைவில் இதேபோன்று இன்னும் ஏராளமான நாய் குட்டிகளுக்கு என் பெயர் வைப்பார்கள் என்று எண்ணுகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி