செய்திகள்,திரையுலகம் ‘ஜில்லா’ படத்தின் 100 நாள் விழாவில் பங்கேற்கும் விஜய்!…

‘ஜில்லா’ படத்தின் 100 நாள் விழாவில் பங்கேற்கும் விஜய்!…

‘ஜில்லா’ படத்தின் 100 நாள் விழாவில் பங்கேற்கும் விஜய்!… post thumbnail image
சென்னை:-விஜய்,மோகன்லால்,காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார்.

தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா படம் தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. 100வது நாளை கொண்டாடு விதமாக விழா ஒன்றை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இவ்விழாவை சென்னை ஆல்பட் திரையரங்கில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர்.இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள். மேலும் இவ்விழாவில் நினைவு பரிசுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி