மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-கோவையில் பா.ஜ.க தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து குஜராத் முதல்வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை கொடிசியா மைதானத்தில் இதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் மாலை 6.45 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார்.அதன்பின்னர் அங்கிருந்து கார் மூலம் சின்னியம்பாளையம் அடுத்துள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு 7.10 மணிக்கு மோடி சென்றார். இதற்கு முன்னதாகவே மாலை 5.30 மணியளவில் நடிகர் விஜய், ஹோட்டலில் மோடியை சந்திப்பதற்காக காத்திருந்தார்.

இந்நிலையில், 7.20 மணிக்கு பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் இருவரும் பேசினர். இந்த சந்திப்பின்போது செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.மோடியுடனான சந்திப்பு முடிந்த உடனேயே நடிகர் விஜய் விமான நிலையத்துக்குச் சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: