61வது தேசிய விருது: சிறந்த பிராந்திய மொழி படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக ராம் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகியுள்ளது. இப்படம் ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு இப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா தேர்வாகியுள்ளார். சிறந்த பாடலாசிரியராக இப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ என்ற பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமார் தேர்வாகியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: