செய்திகள்,விளையாட்டு மீண்டும் வருகிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்!…

மீண்டும் வருகிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்!…

மீண்டும் வருகிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். ஒலிம்பிக் விளையாட்டில் நீச்சலில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்தவர். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் 28 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தனது ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டுள்ளார். மீண்டும் நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்க இருப்பதாக அவரது நீண்ட கால பயிற்சியாளர் பாப் பவ்மேன் அறிவித்து இருக்கிறார்.

அமெரிக்காவின் மெசா நகரில் வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கும் நீச்சல் போட்டியில் அவர் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை ஆகிய பிரிவுகளில் களம் இறங்குகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி