செய்திகள்,தொழில்நுட்பம் சனி கிரகத்தில் உருவான புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு!…

சனி கிரகத்தில் உருவான புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு!…

சனி கிரகத்தில் உருவான புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-சூரிய குடும்பத்தில் சனி பெரிய கிரகமாகும். இதற்கு 61 துணை கிரகங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் இது தெரிய வந்துள்ளது. அதில் மிகச்சிறிய ஒரு துணை கிரகம் சனி கிரகத்தின் சிறப்பு அம்சமான பிரகாசமான வளையத்துடன் உள்ளது. அது ‘ஐஸ்’ கட்டி போன்று ‘பள பள’ வென இருக்கிறது.அந்த துணை கிரகம் 1200 கி.மீட்டர் நீளமும், 10 கி.மீட்டர் அகலத்துடனும் காணப்படுகிறது. அதுபோன்ற ஒரு துணை கிரகத்தை சனி கிரகத்தில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் களிமுர்ரே தெரிவித்துள்ளார்.

இந்த துணை கிரகத்துக்கு ‘பொக்கி’ என பெயரிட்டுள்ளனர். புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பின் மூலம் பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனிடம் இருந்து இடம் பெயர்ந்தது எப்படி என்ற அறிய முடியும் என்றும், அது குறித்தும் ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி