அரசியல்,செய்திகள்,திரையுலகம் இன்று மோடியுடன் விஜய் சந்திப்பு!…

இன்று மோடியுடன் விஜய் சந்திப்பு!…

இன்று மோடியுடன் விஜய் சந்திப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகர் ரஜினிகாந்தை நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார்.அடுத்து விஜய்யையும் நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார். ரஜினியை சந்தித்த போதே விஜய்யையும் பார்ப்பதாக இருந்தது. ஆனால் விஜய் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் சந்திப்பு நிகழவில்லை.

தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக நரேந்திர மோடி கோவை வருகிறார். அப்போது இருவரையும் சந்தித்து பேச வைக்க தமிழக பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்பாடு செய்தனர்.விஜய்யும் நரேந்திர மோடியை சந்திக்க இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிற்பகல் கோவை செல்கிறார். அங்கு நரேந்திர மோடியை சந்திக்கிறார். தேர்தலையொட்டி இருவரும் சந்திப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விஜய் ஏற்கனவே ரசிகர் மன்றத்தினரை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் சமூக சேவை பணிகளை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி