ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஜான்சன் 20 ஓவர், ஒருநாள் போட்டி இருந்து ஓய்வு அறிவிப்பு!…

விளம்பரங்கள்

அபுதாபி:-ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் மிச்சேல் ஜான்சன்.வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் அவர் காயம் காரணமாக ஆடவில்லை.

இந்நிலையில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற ஜான்சன் திட்டமிட்டுள்ளார். டெஸ்டில் மட்டுமே விளையாட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–டெஸ்டில் மட்டும் விளையாட விரும்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை விட இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் ஆசஷ் டெஸ்ட் தொடரை இலக்காக கொண்டு உள்ளேன்.இதற்காக டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். 20 ஓவர், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: