செய்திகள்,திரையுலகம் ‘வாலு’ படத்தில் நடிக்க மறுக்கும் ஹன்சிகாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை?…

‘வாலு’ படத்தில் நடிக்க மறுக்கும் ஹன்சிகாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை?…

‘வாலு’ படத்தில் நடிக்க மறுக்கும் ஹன்சிகாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை?… post thumbnail image
சென்னை:-சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். இதன் படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இருவருமே காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.காதலை முறித்து விட்டதாக அறிவித்தனர்.

இதனால் வாலு படம் முடிவடையாமல் நிற்கிறது. அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் பேசி அதில் ரூ.55 லட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன் என்றும் ஆனால் வாலு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்க ஹன்சிகா மறுப்பதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் இகுறித்து விசாரணையை துவங்கியுள்ளது. ஹன்சிகாவிடமும் விசாரணை நடக்கிறது. வாலு படத்தை முடித்து கொடுக்கும்படி ஹன்சிகாவிடம் பட அதிபர் சங்கம் வலியுறுத்தும் என தெரிகிறது. அவர் மறுத்தால் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி