செய்திகள்,திரையுலகம் ராகினி எம்எம்எஸ் 2 (2014) திரைவிமர்சனம்…

ராகினி எம்எம்எஸ் 2 (2014) திரைவிமர்சனம்…

ராகினி எம்எம்எஸ் 2 (2014) திரைவிமர்சனம்… post thumbnail image
2011ஆம் ஆண்டு வெளியான ராகினி எம்.எம்.எஸ் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் படம் ராகினி எம்.எம்.எஸ்2.முதல் பாகத்தில் தப்பிப் பிழைக்கும் கதாநாயகி ராகினி மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு ட்ரீட்மென்ட்டில் இருக்கிறாள். இங்கிருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது.

பேய் இருப்பதாகச் சொல்லப்படும் அந்த நிஜ லொக்கேஷனான காட்டு பங்களாவில் தப்பிப் பிழைக்கும் பெண்ணின் வாழ்க்கைச் சம்பவத்தைப் படமாக்கி காசு பார்க்க ஆசைப்படுகிறார் ஒரு டைரக்டர். ஒரு போர்னோ நடிகை, ராகினி கேரக்டரில் நடிக்க சம்மதிக்கிறார்.பேயின் வீட்டுக்கே போய் படப்பிடிப்பு நடத்துவதால் ஏற்படும் விபரீதமே இரண்டாம் பாகத்தின் கதை.படத்தில் போர்னோ ஸ்டார் கேரக்டரில் நடித்திருப்பது சன்னி லியோன்.

பேய் பிடித்த பிறகு கொலை செய்ய மட்டும் அல்லாமல் செக்ஸ் பண்ணவும் வெறிகொண்ட வினோதப் பேயை இந்தப் படத்தில் காட்டி கிளுகிளுப்பு உண்டாக்குகிறார்கள்.சன்னியும் லிப் லாக், டூ பீஸ் என கிக் ஏற்றுகிறார். அலறவைக்கும் பேய்க் காட்சிகளில்கூட தியேட்டரில் விசில் பறக்கிறது.

மொத்தத்தில் ‘ராகினி எம்.எம்.எஸ்’ கவர்ச்சியான பேய்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி