கமல் மருமகளாகும் மாடல் அழகி!…

விளம்பரங்கள்

சென்னை:-‘விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.நடிகர் ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு பெங்களூருவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தில் புது வரவாக இப்போது பார்வதி நாயர் இணைந்துள்ளார். பெங்களூர் மாடல் அழகியான இவர், படத்தில் கமல்ஹாசனின் 19 வயது மகன் அஸ்வினுக்கு ஜோடியாகவும் கமலின் மருமகளாகவும் நடிக்கிறார்.அதேசமயம் ‘மரியான்’ புகழ் பார்வதி மேனன், ஜெயராமின் மகளாக நடிக்கிறார். ஏற்கெனவே, ‘உத்தம வில்லன்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பூஜா குமார், ஆன்ட்ரியா, நாசர், ஜெயராம், பார்வதி மேனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்போது அந்த வரிசையில் பார்வதி நாயரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கமலும் வசனத்தை கிரேஸி மோகனும் எழுதுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: