நான் சிகப்பு மனிதன் (2014) திரை விமர்சனம்…

விளம்பரங்கள்

‘நார்கோலெப்ஸி’ என்னும் வியாதி வந்தவர்கள் திடீரென உண்டாகும் சப்தம், அதிகப்படியான கோபம், அதிர்ச்சியான சந்தோஷம் இப்படி எந்தவிதமான எமோஷன் வந்தாலும் உடனே தூக்கநிலைக்கு போய்விடுவார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார் விஷால்.அப்படி அவர் தூக்கத்தில் இருந்தாலும், அவரின் மூளை மட்டும் விழிப்புடனே இருக்கும். தன் முன்னால் யார் என்ன பேசினாலும், கேட்டாலும் அது அவரது மூளையில் பதிவாகிவிடும்.ஆனால் மழையிலோ அல்லது தண்ணீரிலோ இருந்தால் இந்த வியாதி இவர்களை தாக்காதாம்.

இப்படிப்பட்ட வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட விஷாலுக்கு சில ஆசைகள் உருவாகின்றன. கை நிறைய சம்பாதித்து அம்மாவுக்கு ஓய்வு தரவேண்டும், ஒரு நாள் முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும், ரோட்டில் தனியாக நடந்து செல்ல வேண்டும், ஷகிலா படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும், அழகான பெண்ணை சந்திக்க வேண்டும், லவ் பண்ண வேண்டும், தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும்.என ஆசைப்படும் விஷாலின் வாழ்க்கையில் லக்ஷ்மிமேனன் நுழைகிறார். விஷாலின் ஆசைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வைத்து அவரை சந்தோஷத்தின் உச்சத்திற்கே கொண்டே போகிறார் லக்ஷ்மிமேனன்.முதலில் நண்பர்களாக பழகும் விஷால்,லட்சுமி மேனன்,பிறகு காதலர்களாக மாறுகின்றனர்.ஆனால் இவர்களின் காதலை லட்சுமி மேனனின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் இந்த நோய் தாக்கியவர்கள் அப்பாவாக ஆகமுடியாது என்று அவர் எதிர்க்கின்றார். ஆனால் லட்சுமி மேனன் இந்த பிரச்சனைக்கு ஒரு புதிய தீர்வை யோசிக்கின்றார். அதாவது விஷாலை நீச்சல் குளத்திற்குள் இழுத்து சென்று விஷாலுடன் ஒன்றுசேர்ந்து விடுகிறார்.

இந்நிலையில் லட்சுமி மேனனை அடையாளம் தெரியாத நான்கு பேர் பலாத்காரம் செய்துவிட, அந்த நேரத்தில் விஷாலை நார்கோலெப்ஸி நோய் தாக்கி தூங்கிவிடுவதால், அவரால் லட்சுமி மேனனை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. லட்சுமி மேனன் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார். காதலியை பலாத்காரம் செய்த நான்கு பேர்களை விஷால் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் மீதி கதை.விஷாலுடன் இயக்குனர் திரு இணையும் முன்றாம் படம் இது.தனது முதல் இரண்டு படைப்புகளான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களில் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்ததைப் போலவே இப்படத்திலும் இதுவரை இந்திய சினிமாக்களில் காட்டப்படாத ‘நார்கோலெப்ஸி’ எனும் நோயின் தாக்கத்தை காட்டியிருக்கிறார்.

முதல் பாதியில் சென்டிமென்ட், காதல், காமெடி என படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி, இடைவேளையின்போது ‘பதைபதைக்க’ வைக்கும் ஒரு ட்விஸ்ட்டை வைக்கிறார். அந்தக் காட்சியை ஏற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நாட்டில் நடப்பதைத்தான் அவர் படமாக்கியிருக்கிறார் என்பதால், இரண்டாம் பாதியை பார்க்கும் ஆவல் தானாகவே ஒட்டிக்கொள்கிறது. இடைவேளைக்குப் பின்னர் நம்மால் யூகிக்க முடியாத பல திருப்பங்களைத் தந்திருக்கிறார் திரு. யார்தான் வில்லன் என நாம் குழம்பிப் போயிருக்கும் வேளையில். வில்லன் இவர்தான் என நமக்குக் காட்டும்போது இவரா இப்படி. என திகைக்க வைத்திருக்கிறார்.விஷாலின் தூங்கி வழிந்த முகம், கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. நார்கோலெப்ஸி நோய் தாக்கியதால் சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் உணர்வை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.லட்சுமி மேனன் இடைவேளை வரைதான் வருகிறார். அழகாக இருக்கிறார்.இனியா கொடுத்த நெகட்டிவ் ரோலை சரியாகச் செய்திருக்கிறார்.விஷாலின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் சிறப்பாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ புதுமையான கதை ….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: