நயன்தாராவை புலம்ப விடும் ஹன்சிகா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை நயன்தாரா நடித்த ஆரம்பம், ராஜாராணி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததோடு, மீண்டும் சிம்பு, ஜெயம் ரவி என இளவட்ட ஹீரோக்களின் படங்களில் அவர் கமிட்டானபோது, அடுத்த நம்பர் ஒன் நடிகையாகி விடுவாரோ என்கிற அச்சம் ஹன்சிகா, காஜல்அகர்வால் உள்ளிட்ட நடிகைளுக்கு ஏற்பட்டது.

இதில், நயன்தாராவின் வரவினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகாதான். அவர் நடிக்க வேண்டிய ஓரிரு படங்கள் நயன் பாக்கெட்டிற்குள் எகிறிக்குதித்தன.இதனால் விவேகத்துடன் யோசித்த ஹன்சிகா, சிம்புவின் காதலை நிராகரித்த அதே வேகத்தில் சில மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை அபேஸ் பண்ணிவிட்டார். தற்போது அவர் நடித்துள்ள மான் கராத்தே ஹிட்டடித்திருப்பதால் இறங்குமுகத்தில் இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட் மீண்டும் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தனது காதலரான சிம்புவை தன்னிடமிருந்து அபகரித்த நயன்தாராவுக்கு தகுந்த அட்டாக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஹன்சிகா, அவர் பேசிக்கொண்டிருக்கும் சில படங்களை தன் பக்கம் இழுக்கும் அதிரடி முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளாராம்.இதில் சில வாய்ப்புகள் ஹன்சிகா பக்கம் திரும்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நயன்தாரா, மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தேவையில்லாமல் சிம்புவுடன் நடிக்க கமிட்டாகி, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி விட்டேனே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: