செய்திகள்,திரையுலகம் ஜாக்கிச்சானை முந்திய ரஜினியின் ‘கோச்சடையான்’!…

ஜாக்கிச்சானை முந்திய ரஜினியின் ‘கோச்சடையான்’!…

ஜாக்கிச்சானை முந்திய ரஜினியின் ‘கோச்சடையான்’!… post thumbnail image
சென்னை:-ரஜினியை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் திரைப்படத்தை எடுத்தார் சௌந்தர்யா.சில காரணங்களால் அப்படம் நிறுத்தப்பட்டு பின் ரஜினி நடிக்க இருந்த ராணா திரைப்படம் அவர் உடல்நல பிரச்சணையால் கிடப்பில் கிடக்க, சுல்தான் தி வாரியர் திரைப்படத்தை சற்று மாடுலேட் செய்து கோச்சடையானாக மாற்றினர்.

தற்போது மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள கோச்சடையான் திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையிட உள்ளனர்.ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு பல ஆராவாரங்களும், எதிர்ப்பார்ப்புகளும் இருப்பது போல் தற்போது ரஜினியின் கோச்சடையானும் பேரார்வம் பெற்றிருக்கிறது.
மேலும் உழைப்பாளர் தினம் மற்றும் தல அஜித்தின் பிறந்தநாளுமான மே 1 ஆம் தேதியில் கோச்சடையான் சுமார் 3850 திரையரங்கில் வெளியிடவுள்ளது.

ஜாக்கிசான் படம் வெளிவரும் எண்ணிக்கையை விட மிக அதிகமான எண்ணிக்கை என கூறப்படுகிறது.தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 9 மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படம் மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் வெளிவரும் முதல் அனிமேஷன் 3டி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி