எமிஜாக்சனை வெல்வாரா த்ரிஷா!…

விளம்பரங்கள்

சென்னை:-கெளதம்மேனன் இயக்கும் அஜீத்தின் 55வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத்துக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தபோதும் இன்னும் ஒருவர் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.ஒரு கதாநாயகி அனுஷ்கா என்று முடிவாகி விட்டபோதும், இன்னொரு கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்பதில் பலத்த குழப்பம் நீடித்து வருகிறது.

இதுவரை ஐ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன்தான் அந்த இன்னொரு நாயகி என்றார்கள். ஆனால் இப்போதோ, த்ரிஷாவை அந்த வேடத்துக்கு புக் பண்ணலாம் என்று கெளதம்மேனன் தரப்பு நினைக்கிறதாம்.ஆனால், அஜீத்தரப்போ, அவருடன் த்ரிஷா இணைந்த ஜி, கிரீடம் என்ற இரண்டு படங்களும் ப்ளாப் ஆனதால், எதற்கு திரும்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்கிறார்களாம்.

ஆக, அஜீத்தரப்பு த்ரிஷாவை வேண்டாம் என்று சொல்ல, கெளதம்மேனன்தரப்பு வேண்டும் என்று சொல்ல, ஆளுகொரு பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.இருப்பினும் இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: