அமலாபாலின் காதலை காட்டிக் கொடுத்த இயக்குனர்!…

விளம்பரங்கள்

சென்னை:-இயக்குநர் விஜய் உடனான காதலை இத்தனை காலம் மறைத்து வைத்திருந்த அமலாபால், அவரது காதலர் விஜய் அமெரிக்காவில் இருக்கும்போது தன்னிலை விளக்கம் கொடுக்கும்நிலைக்கு தள்ளப்பட்டார்.அவர் கொடுத்த விளக்கத்தில் இயக்குநர் விஜய் உடனான காதலை ஒப்புக்கொள்வதுபோல், வெளிநாட்டிலிருந்து விஜய் சென்னை திரும்பிய பிறகு எங்களின் எதிர்காலம் பற்றி அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இயக்குநர் விஜய் சைவம் பட வேலையில் பிஸியாக இருக்கும்போது, அவசரஅவசரமாக திருமண அறிவிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று அமலாபால் தரப்பில் விசாரித்தபோது, இத்தனை பிரச்சனைகளுக்கு எல்லாம் நடிகர் பார்த்திபன்தான் காரணம் என்று கையைக் காட்டுகிறார்கள். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா?பார்த்திபன் இயக்கி வரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தில் ஆர்யா உடன் இணைந்து கெஸ்ட்ரோலில் நடிக்கிறார் அமலாபால். அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, பார்த்திபனுடன் நட்பானாராம் அமலாபால்.அந்த நட்பின் அடிப்படையில் இயக்குநர் விஜய்யை தான் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் பார்த்திபனிடம் சொல்லி இருக்கிறார்.

மேடையில் சுவாரஸ்யமாகப் பேசும் வழக்கமுடைய பார்த்திபன் சைவம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில், திருவள்ளுவருக்கு கூட அறத்துபால், பொருட்பால், காமத்துபால் ஆகிய மூன்று பால்களைத்தான் தெரியும். திருவள்ளுவரை விட, விஜய் பெரிய ஆள்.அவருக்கு அமலாபாலையே தெரியுமே… விஜய், திருமணத்துக்கு பின் முத்தத்தில் சைவமாக இருந்தால், அமலாக்கப்பிரிவினர் வந்து கைது செய்து விடுவார்கள்.
என்று கிசுகிசு பாணியில் இயக்குநர் விஜய்,அமலாபால் காதல் விவகாரத்தை போட்டு உடைத்துவிட்டார். இதனால்தான் பார்த்திபன் மீது கடுப்பில் இருக்கிறாராம் அமலாபால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: