செய்திகள்,தொழில்நுட்பம் ஒரே நேர்கோட்டில் வரும் சூரியன்,பூமி,செவ்வாய்!…

ஒரே நேர்கோட்டில் வரும் சூரியன்,பூமி,செவ்வாய்!…

ஒரே நேர்கோட்டில் வரும் சூரியன்,பூமி,செவ்வாய்!… post thumbnail image
சென்னை:-பூமி போன்று செவ்வாயும் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு எதிராக செவ்வாய் கோள் வரும் போது பூமியில் இருந்து செவ்வாய் கோளை பார்க்க முடியும். இந்த நேரத்தில் சூரியன், பூமி, செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் வரும்.

ஒவ்வொரு 26 மாதத்திற்கு ஒரு முறை இந்த அபூர்வ நிகழ்வு வானில் ஏற்படுகிறது. இதுபோன்ற அபூர்வ நிகழ்வின் போது செவ்வாய் கோள் பூமிக்கு அருகில் வருவதால் நாம் பூமியில் இருந்து அதை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வு வானில் ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.கடந்த 2012–ம் ஆண்டு பூமி அருகில் செவ்வாய் கோள் வந்த போது அதனுடைய தூரம் 10.08 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதனையும் விட குறைவாக 9.2 கோடி கிலோமீட்டர் தூரத்திற்குள் வருகிறது.

அடுத்து 2016–ம் ஆண்டு மே மாதம் 22–ந்தேதி மீண்டும் இந்த அபூர்வ நிகழ்வை நாம் காணமுடியும். அப்போது 7.6 கோடி கிலோமீட்டர் தூரத்திற்குள்ளும், 2050–ம் ஆண்டு ஆகஸ்டு 14–ந்தேதி 5.5 கோடி கிலோமீட்டர் தூரத்திற்குள்ளும் வரும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.இந்த அபூர்வ நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி