செய்திகள்,திரையுலகம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் கமலின் ‘உத்தமவில்லன்’?…

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் கமலின் ‘உத்தமவில்லன்’?…

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் கமலின் ‘உத்தமவில்லன்’?… post thumbnail image
சென்னை:-ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்‘. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார்.

சரித்திர காலத்து கதையைப் பின்னணியாக கொண்டு திரைப்படமாக உருவாகி வருகிறது ‘உத்தமவில்லன்’. படம் விறுவிறு வேகத்தில் தயாராகி வரும் நிலையில்
மே மாத இறுதிக்குள் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடுமாம்.

இந்நிலையில் படத்தை விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 29ல் வெளியிட திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.அஞ்சான் படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி