செய்திகள் அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!…

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!…

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!… post thumbnail image
சீனா:-ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 2017ம் ஆண்டு பொதுத் தேர்தலில், சீனா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என அந்நாடு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த கோரும் தலைவர்களான ஆன்சன் சான் மற்றும் மார்டின் லீ ஆகியோர், கடந்த 4ம் திகதி வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோசப் பிடனை சந்தித்து பேசினார்கள்.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தங்களது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் இல்லையென்றால் இருநாடுகளின் உறவிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி