‘கத்தி’ படத்தில் இருந்து விலகும் விஜய்?…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கத்தி‘ திரைப்படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து வருவதாக கூறப்பட்டாலும், இந்த படத்தினை உண்மையில் தயாரிப்பது லைக்கா மொபைல் கம்பெனி என்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் தயாரிக்கின்றது.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜா என்பவர் ஒரு தமிழராக இருந்தாலும், இவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உரிமையை வாங்கியது இவருடைய நிறுவனமான லைக்கா ப்ளை என்ற நிறுவனம்தான். மேலும் இலங்கையில் 2G உரிமத்தையும் இவருடைய நிறுவனம்தான் பெற்றுள்ளது. ராஜபக்சேவுக்கும், சிங்கள அரசுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவர் தயாரிக்கும் திரைப்படத்தில் விஜய் நடிப்பதால் தமிழ் அமைப்புகள் கொந்தளித்து உள்ளது.

பிரான்ஸில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்று நடிகர் விஜய்க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. இதில் இனத்துரோகியின் படத்தில் இருந்து விஜய் உடனே விலகவேண்டும், இல்லையேல் விஜய் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும் விஜய்க்கு எதிராக போராட தயாராகி வருகின்றது.விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி படத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் மூலம் பிரச்சனை வந்தது போல் ‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகள் மூலம் பிரச்சனை வந்துள்ளதால் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விஜய் படத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்று தமிழ் அமைப்புகள் விஜய்யிடம் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து என்ன முடிவு எடுப்பது என்று விஜய் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: