செய்திகள்,திரையுலகம் ஆசியாவில் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கும் இடம்!…

ஆசியாவில் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கும் இடம்!…

ஆசியாவில் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் ரஜினிக்கும் இடம்!… post thumbnail image
சென்னை:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான செல்வாக்குமிக்கவர்கள் பட்டியல் நேற்று வெளியிட்டது.

இந்த பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு 63வது இடமும், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 66வது இடமும் வழங்கி உள்ளது.சீன அதிபர் சீ ஜின்பிங் முதல் இடத்தையும், காங்கிரஸ் தலைவர் சோனியா 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 4வது இடமும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு 5வது இடமும், பிரதமர் மன்மோகன் சிங் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி