ஸ்டார் ஓட்டலில் விஜய்சேதுபதி,நந்திதா!…

விளம்பரங்கள்

சென்னை:-சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் கடந்த 35 நாட்களாக நடந்தது.இந்த படத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, வடிவுக்கரசி, தீப்தி கணேசன், மற்றும் இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் மலைவாசிகளின் வாழ்க்கை முறையை பற்றியது என்பதால் கொடைக்கானல் மலைப்பிரதேசங்களில் கடந்த 35 நாட்களாக படப்பிடிப்பு நடந்தது.

நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் கொடைக்கானலில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்த விஜய் சேதுபதி, நந்திதா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினர்.இந்த படத்தின் முதல்முறையாக யுவன்ஷங்கர் ராஜாவின் இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார்.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் இடம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆலோசனை செய்து வருகின்றனார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: