செய்திகள்,தொழில்நுட்பம் சந்திரனின் வயது 447 கோடி ஆண்டுகள் என கண்டுபிடிப்பு!…

சந்திரனின் வயது 447 கோடி ஆண்டுகள் என கண்டுபிடிப்பு!…

சந்திரனின் வயது 447 கோடி ஆண்டுகள் என கண்டுபிடிப்பு!… post thumbnail image
லண்டன்:-பூமியின் துணை கிரகமாக சந்திரன் உள்ளது. இது எப்போது தோன்றியது.அதன் வயது என்ன.என்பது போன்ற பல கேள்விகள் விண்வெளி விஞ்ஞானிகளிடம் நீண்ட காலமாக எழுந்துள்ளது.

அது குறித்து விஞ்ஞானிகள் குழு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டள்ளனர். முடிவில், சந்திரன் 447 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது என துள்ளியமாக கணித்துள்ளனர். எனவே தற்போது சந்திரனின் வயது 447 கோடி ஆண்டுகள் என தெரிவித்துள்ளனர்.செவ்வாய் கிரக அளவிலான ஒரு பொருள் பூமியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

அதில் இருந்து உடைந்த சிதறல் தான் சந்திரன் ஆக உருமாறியுள்ளது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில், பூமியின் சிதறலில் இருந்த சந்திரன் தோன்றி 10 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற கருத்தும் எழுந்துள்ளது. இருந்தாலும் அது சூரிய குடும்பத்துடன் இணைந்து 447 கோடி ஆண்டுகள் ஆகிறது. எனவே, அதன் வயது 447 கோடி ஆண்டுகள் தான் என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி