செய்திகள்,திரையுலகம் அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என அறிவித்தார் அரவிந்த்சாமி!…

அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என அறிவித்தார் அரவிந்த்சாமி!…

அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என அறிவித்தார் அரவிந்த்சாமி!… post thumbnail image
சென்னை:-தளபதி, தாலாட்டு, மறுபடியும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அரவிந்த்சாமி. சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மீண்டும் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.

அதன்பிறகு புதிய படங்களை ஏற்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் வில்லன் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் பரவிவருகிறது.இதையறிந்து அரவிந்த்சாமி, வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

மேலும்,நான் வில்லன் வேடத்தில் நடிப்பதாக முட்டாள்தனமாக யாரோ வதந்தி கிளப்பி விடுகிறார்கள். வில்லன் வேடத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நான் ஏற்கும் வேடம் குறித்து எனது டுவிட்டர் பக்கத்தில் நானே வெளியிடும்வரை அதுபற்றி யாரும் நம்ப வேண்டாம் என்று கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி