செய்திகள்,விளையாட்டு 20 ஓவர் உலககோப்பை: இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி!…

20 ஓவர் உலககோப்பை: இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி!…

20 ஓவர் உலககோப்பை: இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி!… post thumbnail image
டாக்கா:-20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் டாக்காவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மேற்குஇந்தியத்தீவுகள் அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் பெரேராவும், தில்ஷானும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். பெரேரா 26 ரன்னிலும் தில்ஷான் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சங்ககராவும், ஜெயவர்த்தனேவும் உடனடியாக வெளியேறினர். இறுதியில் கேப்டன் திரிமண்ணேவும், மேத்யூஸ்ம் அதிரடியாக விளையாட ரன்கள் மளமளவென அதிகரித்தது. கடைசியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய திரிமண்ணே 44 ரன்களிலும், மேத்யூஸ் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்ல் 3 ரன்னிலும், சுமித் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிம்மோன்ஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டுவைன் பிராவோ 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த அணி 13.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது சாமுவேல்ஸ் 18 ரன்களிலும், சமி ரன் ஏதுமின்றி களத்தில் நின்றனர்.இறுதியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலங்கை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் இலங்கை அணி உலககோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

SRI – Inning

Batsman Status R B M 4s 6s S/R
Perera K. b Santokie K. 26 12 3 2 2 216.67
Dilshan T. run out Simmons L. 39 39 6 2 1 100.00
Sangakkara K. c & b Badree S. 1 6 1 0 0 16.67
Thirimanne L. c Simmons L. b Santokie K. 44 35 3 3 2 125.71
Mathews A. c Bravo Dw. b Russell A. 40 23 1 3 2 173.91
Prasanna S. not out 6 5 0 0 0 120.00
Extras: (w 2, lb 2) 4
Total: (20 overs) 160 (8.0 runs per over)
Bowler O M R W E/R
Badree S. 3.6 0 23 1 6.39
Santokie K. 3.6 0 46 2 12.78
Narine S. 3.6 0 20 0 5.56
Samuels M. 3.6 0 23 0 6.39
Russell A. 2.6 0 37 1 14.23
Gayle C. 0.6 0 9 0 15.00

WI – Inning

Batsman R B M 4s 6s S/R
Samuels M. not out 18 29 4 1 0 62.07
Gayle C. b Malinga L. 3 13 3 0 0 23.08
Smith D. R. b Malinga L. 17 14 3 1 1 121.43
Simmons L. lbw Prasanna S. 4 8 0 0 0 50.00
Bravo Dw. c Jayawardene M. b Kulasekara N. 30 19 4 3 1 157.89
Sammy D. not out 0 0 0 0 0 100.00
Extras: (w 7, lb 1) 8
Total: (13.5 overs) 80 (5.8 runs per over)
Bowler O M R W E/R
Mathews A. 0.6 0 4 0 6.67
Prasanna S. 1.6 0 15 1 9.38
Kulasekara N. 2.5 0 22 1 8.80
Senanayake S.1.6 0 6 0 3.75
Malinga L. 1.6 0 5 2 3.13
Herath R. 3.6 0 27 0 7.50

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி