செய்திகள்,தொழில்நுட்பம் மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துவக்கம்!…

மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துவக்கம்!…

மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துவக்கம்!… post thumbnail image
பெர்த்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.இன்று 27-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.ஆஸ்திரேலியாவின் பெர்த் ராணுவத் முகாமிற்கு சென்ற மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் காணாமல்போன விமானத்திற்கு என்ன ஆனது என்பதை கண்டறியும் பணியை தமது நாடு கைவிடப் போவதில்லை தெரிவித்துள்ளார்.காணாமல்போன எம்.எச்-370 விமானத்திற்குள்ளே என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியுமா என்பதில்விசாரணை அதிகாரிகள் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் தெரிவித்து உள்ளார்.

விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிஙகர் லொக்கேட்டர் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கருப்பு பெட்டியை தேடும் பணி இன்று தொடங்கியது.விமானத்தின் கருப்பு பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில் ஈடுபடுகின்றன. இவைகள் 240 கிலோமீட்டர் பரப்பலவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபடுகின்றன.இன்று வெள்ளிக்கிழமை விமானத்தை தேடும் பணியில் 14 விமானங்கள், 9 கப்பல்கள் ஈடுபட்டு உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி