செய்திகள்,திரையுலகம் மான் கராத்தே (2014) திரைவிமர்சனம்…

மான் கராத்தே (2014) திரைவிமர்சனம்…

மான் கராத்தே (2014) திரைவிமர்சனம்… post thumbnail image
கொல்லிமலைக்கு பிக்னிக் போகும் ஐந்து நண்பர்கள் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கும்போது தற்செயலாக ஒரு சித்தரை பார்க்கின்றார்கள். சித்தரிடம் எதிர்காலத்தை உங்களால் சொல்ல முடியுமா என கேட்கின்றனர். அவரும் முடியும் என்று சொல்ல ஆயுத பூஜைக்கு மறுநாள் வரும் பேப்பரை உங்களால் எப்பொழுது வரவழைக்க முடியுமான்னு நண்பர்கள் கேட்கின்றனர். அவரும் செய்தித்தாளை வரவழைத்து கொடுக்கின்றார்.

அந்த செய்தித்தாளில் பீட்டர் என்கிற பாக்சரின் மூலம் இந்த ஐந்து நண்பர்களுக்கு ரூ.2 கோடி கிடைத்ததாக ஒரு செய்தி இருக்கின்றது. அதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடையும் நண்பர்கள் அந்த பீட்டர் என்கிற பாக்சரை தேடி செல்கின்றனர். பாக்சரை தேடி வரும் நண்பர்களுக்கு பாக்சிங் என்றால் என்ன என்று தெரியாத ஒரு அப்பாவி இளைஞனை சந்திக்கின்றனர். பின்னர் அந்த பீட்டரை எப்படி பாக்சராக மாற்றுகின்றனர் என்பதுதான் கதை.படம் முழுவதும் லாஜிக் பற்றி கவலைப்படாமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் எடுக்கப்பட்ட படம்தான் மான் கராத்தே. காதல் காட்சிகளில்கூட காமெடியை புகுத்தி நான்ஸ்டாப் காமெடி படம் செய்திருக்கிறார் திருக்குமரன்.

வழக்கம்போல அப்பாவி கேரக்டரில் வருகிறார் சிவகார்த்திகேயன். அவரும் நடிகர் சதீஸும் அடிக்கும் கூத்துக்களை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கலாம். ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு ஹன்சிகாவை நன்றாக உபயோகப்படுத்திய இயக்குனர் இவர்தான். பாடல் காட்சிகளில் படு செக்ஸியான உடைகளில் வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். மற்றபடி காமெடி காட்சிகளில் ஹன்சிகா நன்றாகவே தேறிவிடுகிறார்.
இன்னொரு சந்தானம் உருவாகிவிட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு இருக்கிறது சதீஸின் டைமிங் காமெடி வசனங்கள். கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்ப்போம்.
வரிசையாக மூன்று ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழைதான். இந்த படத்திலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சம் கூட போரடிக்கவே இல்லை.

சிறிது நேரமே வரும் வில்லன் வம்சி கிருஷணன் நடிப்பு, பாக்சிங் நடுவராக வரும் சூரியின் நடிப்பு ஆகியவை சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது.அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருக்கிறது. ஸ்ருதிஹாசனும், அனிருத்தும் பாடிய “உன் விழிகளில்: என்று தொடங்கும் பாடல் அருமை. பரவை முனியம்மாவுடன் சிவகார்த்திகேயன் போடும் குத்தாட்டத்திற்கு தியேட்டரே அதிர்கிறது.

மொத்தத்தில் ‘மான் கராத்தே’ காமெடி கலாட்டா…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி