அரசியல்,செய்திகள்,திரையுலகம் நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி!…

நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி!…

நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி!… post thumbnail image
லக்னோ:-பா.ஜ.க. வேட்பாளராக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமா மாலினி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது கையிருப்பு ரொக்கமாக 12 லட்சத்து 52 ஆயிரத்து 552 ரூபாயும், வங்கி இருப்பாக 1 கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 734 ரூபாயும், பங்குகளில் முதலீடாக 82 லட்சத்து 49 ஆயிரத்து 208 ரூபாயும், தேசிய சேமிப்பு பத்திரங்களில் 4 லட்சம் ரூபாயும், 38 லட்சத்து 39 ஆயிரத்து 213 ரூபாய் மதிப்புள்ள காரும், 1 கோடியே 95 லட்சத்து 97 ஆயிரத்து 174 ரூபாய் மதிப்பிலான நகைகளும், 57 கோடியே 38 ஆயிரத்து 440 ரூபாய் மதிப்புள்ள வீடும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரான நடிகர் தர்மேந்திராவிடம் கையிருப்பு ரொக்கமாக 25 ஆயிரத்து 802 ரூபாயும், வங்கி இருப்பாக 33 லட்சத்து 25 ஆயிரத்து 797 ரூபாயும், பங்குகளில் முதலீடாக 28 லட்சத்து 71 ஆயிரத்து 325 ரூபாயும், 52 ஆயிரத்து 313 ரூபாய் மதிப்புள்ள காரும், 53 லட்சத்து 10 ஆயிரத்து 133 ரூபாய் மதிப்பிலான நகைகளும், 19 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலங்களும், 106 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீடும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளி நபர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி வருமானமாக, தனக்கு 43 லட்சத்து 9 ஆயிரத்து 508 ரூபாயும், கணவர் தர்மேந்திராவுக்கு 2 கோடியே 68 லட்சத்து 2 ஆயிரத்து 904 ரூபாயும் கிடைத்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஹேமா மாலினி, தனக்கு வங்கி கடனாக 13 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 245 ரூபாயும், வெளிநபர் கடனாக 7 கோடியே 95 லட்சத்து 6 ஆயிரத்து 13 ரூபாயும் உள்ளதாக அறிவித்துள்ளார்.மொத்தத்தில் 192 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரத்து 620 ரூபாய்க்கான சொத்து கணக்கை அவர் தாக்கல் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி