செய்திகள்,தொழில்நுட்பம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது!…

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது!…

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது!… post thumbnail image
ஸ்ரீஹரிகோட்டா:-கடல்வழி ஆராய்ச்சிக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் மூலம் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்றன. பின்னர் 58 1/2 மணிநேர கவுண்டவுன் 2-ம் தேதி காலை 6.44 மணிக்கு தொடங்கியது.

கவுண்டவுன் முடிந்தவுடன் இன்று மாலை சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்தில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைகோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் சீறிப்பாய்ந்தது.இந்த செயற்கைகோளால் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும். 1432 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்படும்.

இந்தியா அனுப்ப உள்ள 7 வழிகாட்டு செயற்கைக்கோள்களில் தற்போது அனுப்பப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி, இரண்டாவது செயற்கைக் கோள் ஆகும். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைகோள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஏவப்பட்டது. இந்த ஆண்டு இன்னும் இரண்டு வழிகாட்டி செயற்கைகோள்கள் ஏவப்பட உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி