பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஸ்டன்ட் நடிகர் கைது!…

விளம்பரங்கள்

சென்னை:-சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி பாலியல் தொழில் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் ரகசிய விசாரணையில் இறங்கினர்.அவர்களுக்கு, வடபழனியில் ஸ்டூடியோ அருகே இருக்கும் ஆடம்பர பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சினிமா ஸ்டன்ட் நடிகர் பாம்பே குமாரை போலீசார் கைது செய்தனர்.

அவருக்கு துணையாக இருந்த மேலும் 3 பேரும் பிடிபட்டனர். 4 இளம் பெண்களையும் அவர்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். போலீஸ் விசாரணையில் குமார் என்ற பாம்பே குமார் தமிழ் மற்றும் இந்தி படங்களில் ஸ்டன்ட் நடிகராக நடித்து வந்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி அவர், இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியதும் தெரிய வந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: