செய்திகள்,விளையாட்டு பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்!…

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்!…

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்!… post thumbnail image
மிர்புர்:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தான்– வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.டாஸ் ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான கெய்ல், சுமித் ஆகியோர் 8 ரன்னிலும், 5 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய சிம்யோன்ஸ், சாமுவேல்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிம்யோன்ஸ் 31 ரன்னிலும், சாமுவேல்ஸ் 20 ரன்னிலும் ஆட்டம் இழக்க, இறுதியில் களமிறங்கிய கேப்டன் டேரன் சமியும், பிராவோவும் அதிரடியாக விளையாடினர். இதனால் ரன்கள் மளமளவென அதிகரித்தது.

ஆட்டத்தின் இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டேன் பிராவோ 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். கேப்டன் டேரன் சமி 42 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்றார்.பின்னர், களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அகமத் சிகாத், கமரன் அக்மல் டக்-அவுட் ஆக, அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் மளமளவென விக்கெட்டை இழந்தனர்.
பாகிஸ்தான் தரப்பீல் கேப்டன் ஹபீஸ் 19 ரன்களும், அப்ரிடி மற்றும் மக்சூட் தலா 18 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, 17.5 ஓவரில் 82 ரன்களை மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது.

இதன்மூலம், 84 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் 3ந் தேதி நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் இலங்கையுடன் வெஸ்ட் இண்டிஸ் அணி மோதுகிறது. முன்னதாக, 2ந் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.

WES – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. c Akmal K. b Tanvir S. 8 13 1 2 0 61.54
Gayle C. st Akmal K. b Hafeez M. 5 4 1 1 0 125.00
Simmonds L. run out Gul U. 31 29 0 2 2 106.90
Samuels M. b Afridi S. 20 18 0 1 1 111.11
Ramdin D. c Akmal U. b Babar Z. 5 10 0 0 0 50.00
Bravo Dw. run out Akmal K. 46 26 1 2 4 176.92
Sammy D. not out 42 20 1 5 2 210.00
Extras: (w 5, lb 4) 9
Total: (20 overs) 166 (8.3 runs per over)
Bowler O M R W E/R
Hafeez M. 1.6 0 15 1 9.38
Tanvir S. 3.6 0 27 1 7.50
Babar Z. 3.6 0 27 1 7.50
Afridi S. 3.6 0 23 1 6.39
Gul U. 1.6 0 29 0 18.13
Ajmal S. 3.6 0 41 0 11.39

WES – Inning

Batsman R B M 4s 6s S/R
Hafeez M. c Gayle C. b Russell A. 19 33 1 0 0 57.58
Tanvir S. c Sammy D. b Narine S. 14 12 0 1 1 116.67
Babar Z. not out 3 4 1 0 0 75.00
Afridi S. st Ramdin D. b Narine S. 18 12 0 0 2 150.00
Gul U. c Simmonds L. b Santokie K. 4 7 1 0 0 57.14
Ajmal S. b Russell A. 1 3 0 0 0 33.33
Shehzad A. lbw Santokie K. 0 1 0 0 0 0
Akmal K. c Bravo Dw. b Badree S. 0 3 0 0 0 0
Akmal U. st Ramdin D. b Badree S. 1 5 0 0 0 20.00
Malik S. st Ramdin D. b Badree S. 2 5 0 0 0 40.00
Maqsood S. st Ramdin D. b Narine S. 18 22 1 1 1 81.82
Extras: (w 2) 2
Total: (17.5 overs) 82 (4.6 runs per over)
Bowler O M R W E/R
Smith D. R. 0.6 0 11 0 18.33
Samuels M. 2.6 0 20 0 7.69
Santokie K. 2.5 0 9 2 3.60
Badree S. 3.6 0 11 3 3.06
Russell A. 2.6 0 15 2 5.77
Narine S. 3.6 0 16 3 4.44

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி