அரசியல்,செய்திகள்,திரையுலகம் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த சூப்பர் ஸ்டார்!…

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த சூப்பர் ஸ்டார்!…

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த சூப்பர் ஸ்டார்!… post thumbnail image
மும்பை:-நடிகர் சல்மான்கான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை. இருப்பினும் கடந்த தேர்தலின் போது காங்கிரசுக்கு ஆதரவாக மும்பையில் பிரசாரம் செய்தார். இந்த முறை மும்பை வடமேற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குருதாஸ் காமத்துக்கு ஆதரவாக ஆடியோ கேசட்டில் பிரசாரம் செய்துள்ளார்.

அதில் குருதாஸ் காமத் சிறந்த மனிதர் என்றும், பிரச்னைகளை கண்டு ஒதுங்காமல் அதில் தனது நிலையை வெளிப்படுத்தி அதற்காக குரல் கொடுப்பவர் என்றும் புகழ்ந்துள்ளார்.தனக்கு தீங்கு செய்பவர்களையும் மன்னிக்கும் பண்பு கொண்ட அற்புத அரசியல்வாதி என்றும், தனக்காக வாழாமல் தனது தொகுதி மக்களுக்காக வாழ்பவர் என்றும் தெரிவித்துள்ளார். இவரது ஆடியோ கேசட்டுகள் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டங்களில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இதே தொகுதியில் சல்மானின் நெருங்கிய நண்பரும் சக நடிகரும் தயாரிப்பாளருமான மகேஷ் மஞ்ச்ரேக்கர் ராஜ்தாக்கரே கட்சி சார்பாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி