மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இங்கிலாந்தின் நீர்மூழ்கி கப்பல்!…

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ந்தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் நடுவழியில் மாயமானது.அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.

அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்க கூடும் என்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் வழியே கிடைத்த தகவலை கொண்டும் தேடுதல் பணி கடந்த 3 வாரங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேடுதல் பணி நடைபெறுவது மிக சிக்கலானது மற்றும் சவாலானது என்று ஆஸ்திரேலிய தேடுதல் பணியின் தலைவர் ஆங்கஸ் ஹ¨ஸ்டன் நேற்று தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இன்றும் தொடர்கிறது. இந்த பணியில் இங்கிலாந்து நாட்டின் நீர்மூழ்கி கப்பலும் ஈடுபட்டு உள்ளது. அதனுடன் தேடுதல் பணி நடைபெறும் இந்திய பெருங்கடல் பகுதியினை பாரவையிடுவதற்காக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அங்கு சென்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் ராயல் கப்பற்படையின் நீர்மூழ்கி கப்பலான எச்.எம்.எஸ். டயர்லெஸ் பெர்த் நகரின் வடமேற்கே 1,500 கி.மீட்டர் தொலைவில் இன்று காலை வந்து சேர்ந்துள்ளது.
இதனுடன் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குனரும் ஆஸ்கார் விருது வென்றவருமான பீட்டர் ஜாக்சன் இந்த தேடுதல் பணிக்கு தனது தனி ஜெட் விமானத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதித்துள்ளார். மேலும், 10 விமானங்கள் மற்றும் 9 கப்பல்கள் இன்றைய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: