செய்திகள்,திரையுலகம் ஷங்கர் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!…

ஷங்கர் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!…

ஷங்கர் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ‘வீரம்’ படத்தை அடுத்து அஜித் தற்போது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அஜித் தன்னை சந்திக்க வருமாறு ஷங்கர் அழைப்புவிடுத்திருக்கிறார்.
அந்த சந்திப்பின் போது, அஜித்திடம் ஒரு கதையைப் பற்றி ஷங்கர் சொல்லியிருக்கிறார். உடனடியாக அஜித் அக்கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவிருக்கிறாராம்.
இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாம். அது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யாராய்க்கும் இரட்டை வேடமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி